Month: July 2020

HTML tags ஆனது  angle bracket இனுள் எழுதப்படும். HTML program ஆனது <!DOCTYPE html> என்று ஆரம்பிக்கப்படும். இந்த tag ஆனது இவ்வறிக்கை document வகையை சேர்ந்தது என உணர்த்துகின்றது. அதனைத் தொடர்ந்து <html> என்ற  tag எழுதப்படும், இது ஒரு html program என browser க்கு உணர்த்துகின்றது. அடுத்து html program இன் தலைப்பகுதி எழுதப்படும். <head> எனும் tag ஆல் ஆரம்பிக்கப்படும், இது browser இன் தலைப்பை அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றது. html program எழுதுவதற்கு விசைப்பலகை சாவியை தவிர்ந்து ஏனைய குறியீடுகளைப் பயன்படுத்துவதற்காக meta character பயன்படுத்தப்படுகின்றது.

< meta charset = “utf=8”/> என்று எழுதப்படும். இவ்வாறு இருந்தால் மட்டுமே browser இனால் ஏனைய குறியீடுகள் பயன்படுத்தி எழுதப்பட்ட html program ஏற்றுக்கொள்ளப்படும். <title> tag ஆனது  வலைத்தளத்தின் தலைப்பை அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றது. வலைத்தளத்தின் தலைப்பானது </title> எனும் tag ஆல் முடிவடைகின்றது. அத்துடன் html program இன் தலைப்பகுதியானது </head> என்ற tag உடன் முடிவடைகின்றது. html program இன்  தலைப் பகுதியை அடுத்து அதன் உடற் பகுதி எழுதப்படும். <body> எனும் tag ஆல் ஆரம்பிக்கப்படும். body பகுதியானது வலைத்தளத்தில் இடம்பெறவேண்டிய மொத்த விடயங்களும் உள்ளடங்கப்படுகின்றன. body பகுதி </body>  எனும் tag ஆல்  முடிவடைகின்றது. இறுதியாக </html> எனும் tag பயன்படுத்தப்படுகின்றது. இது html program இன் முடிவினை browser க்கு உணர்த்துகின்றது.

Picture 01