இணையத்தளங்கள் தனிநபர் மற்றும் நிறுவனத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்படுகின்றன. உலகலாவிய இணைய வலைப்பக்கங்களை உருவாக்குவதற்கு HTML (Hyper Text Markup Language) எனப்படும் அடிப்படை மொழி பயன்படுத்தப்படுகின்றது. தயாரிக்கப்பட்ட HTML program ஐ இணைய வலைமேலோடியில் (web browser) காட்சிப்படுத்தப்படுகின்றன.
HTML அதன் குறிமுறைகள் மூலம் இணையப்பக்கமொன்றின் (webpage) உள்ளடக்கம் கணினித் திரையின் மீது காட்சிப்படுத்தப்படும் போன்ற தகவல்களை இணைய மேலோடிக்கு தெரிவிக்கும். இதனால் HTML காட்சிப்படுத்தல்/விபரித்தல் மொழி (markup) என அழைக்கப்படும். HTML program ஐ உருவாக்குவதற்கு Notepad, Notepad ++ போன்ற text editors பயன்படுத்தப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட HTML program ஐ காட்சிப்படுத்துவதற்காக Chrome, Internet Explorer, Firefox போன்ற இணயை வலைமேலோடிகள் பயன்படுத்தப்படுகின்றன. HTML மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் program ஐ .html எனும் பெயருடன் சேமிக்கப்படும்.